உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சையில் 25ல் பன்னிரு கருடசேவை

தஞ்சையில் 25ல் பன்னிரு கருடசேவை

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம், ஸ்ரீராமானுஜ தர்சனசபா ஆகியவற்றின் சார்பில் வரும், 25ல், 85ம் ஆண்டு பன்னிரு கருட சேவை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வரும், 24ல் வெண்ணாற்றங்கரை நரசிம்ம பெருமாள் சன்னதியில், மதியம், 12:00 மணிக்கு மேல் திவ்யதேச பெருமாள்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. வரும், 25ல் காலை, 6:00 மணிக்கு வெண்ணாற் றங்கரையில் இருந்து திவ்யதேச பெருமாள் கருட வாகனத்தில் புறப்பட்டு காலை, 7:00 மணிக்கு கொடிமரத்து மூலை வந்தடைகின்றனர். பின், அங்கிருந்து ஹம்ச வாகனத்தில் திருமங்கை ஆழ்வார் முதலிலும், பின், நீலமேகபெருமாள், மணிக்குன்றாப் பெருமாள், நரசிம்மபெருமாள், கல்யாணவெங்கடேசர் என, 24 பெருமாள் சுவாமிகளும் வரிசையாக கருட வாகனத்தில் புறப்பாடு நடைபெறஉள்ளது.

இந்த கருட சேவை வீதிவுலா கீழராஜவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்கு வீதி வழியாக மீண்டும் கொடிமரத்து மூலை வந்தடைகின்றனர். பின், அங்கிருந்து புறப்பட்டு, அவரவர் கோவிலுக்கு சென்றடைகின்றனர். மூன்றாவது நாளான, 26ல் வெண்ணைய்தாழி அலங்காரத்தில், 15 பெருமாள் கோவில்களிலிருந்தும் பெருமாள்கள் புறப்பட்டு, காலை, 7:30 மணிக்கு கொடிமரத்து மூலையை அடைகின்றனர். தொடர்ந்து, நான்கு ராஜவீதிகளிலும் வீதிவுலா வந்து பின், அவரவர் கோவில்களுக்கும் செல்ல உள்ளனர். நிறைவு நாளான, 27ல் விடையாற்றி விழா நடைபெறவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !