உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் 1008 விளக்கு பூஜை

தேவிபட்டினம் அருகே அத்தியூத்து பகவதி அம்மன் கோயிலில் 1008 விளக்கு பூஜை

தேவிபட்டினம் : தேவிபட்டினம் அருகே அத்தியூத்து கிராமத்தில் உதிரமுடைய அய்யனார், பகவதி அம்மன் கோயிலில் வைகாசி விழாவை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 விளக்கு பூஜை நடந்தது. மூலவர் பகவதி அம்மனுக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, ராஜ சொர்ண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவன், பார்வதி வடிவில் முதன்மை விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மாங்கல்ய பூஜை, குங்கும அர்ச்சனை, சக்தி ஸ்தோத்திரம் நடந்தது.அழகன்குளம் அழகியநாயகி மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரேமா ரெத்தினம் குழுவினர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டுக் குழுவினர் செய்திருந்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !