புதுச்சேரியில் மோடி பிரதமராக சிறப்பு பூஜை
ADDED :2329 days ago
புதுச்சேரி: நரேந்திரமோடி மீண்டும் பிரதமராக வேண்டி, புதுச்சேரியில் பா.ஜ., சார்பில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
உழவர்கரை மாவட்ட பா.ஜ., சார்பில், தர்மாபுரியில் தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட தலைவர் சிவானந்தம் தலைமை தாங்கினார். நகர தலைவர் மூர்த்தி, மீனவரணி புகழேந்தி முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ.,க்கள் செல்வகணபதி, சங்கர் மற்றும் முன்னாள் தலைவர் தாமோதரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.