உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழா

கோபால்பட்டி காளியம்மன் கோயில் விழா

கோபால்பட்டி: கோபால்பட்டி காளியம்மன் கோயிலில் ஆண்டு உற்ஸவ விழா நடந்தது.
கடந்த மே 14 ல் விழா துவங்கியது. மே 16 அன்று அம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. மறுநாள் மங்கம்பட்டி விநாயகருக்கு பொங்கல் வைத்து பூஜை நடந்தது. மே 21 ல் கிராம தெய்வங்களுக்கு பழம் வைத்து அலங்கார, அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. வெவ்வேறு நாட்களில் கச்சேரி மற்றும் நாடகம் நடந்தது. நேற்று (மே., 22ல்) அதிகாலை வாண வேடிக்கை, நையாண்டிமேளம், கரகாட்டம் நடந்தது. இதையடுத்து அம்மன் எழுந்தருளி மேளதாளம் முழங்க கோயிலை அடைந்தார்.

தொடர்ந்து மாவிளக்கு எடுத்தல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்கள் அலகு குத்தி நேத்தி கடன் செலுத்தினர். இதையடுத்து கிடா வெட்டி, பொங்கல் வைத்து பூஜை நடந்தது. இன்று (மே., 23ல்) மஞ்சள் நீராட்டுடன் அம்மன் பூஞ்சோலை செல்வதுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !