தேவகோட்டையில் திருஞானசம்பந்தர் குருபூஜை
ADDED :2330 days ago
தேவகோட்டை : தேவகோட்டை நால்வர் கோவிலில் திருஞானசம்பந்தர் குருபூஜை விழா அருசோமசுந்தரன் தலைமையில் நடந்தது. நால்வர் மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தன. நீலா பக்தி பாடல்கள் பாடினார். காசிநாதன், கார்மேகம், கானாடுகாத்தான் சிதம்பரம், பேராசிரியர் சுப்பையா, உமா, திருஞானசம்பந்தரின் தேவாரம் பற்றி ஆய்வுரை நிகழ்த்தினர். பேராசிரியர் சிற்சபேசன் பரிசுகள் வழங்கினார். அருணாசலம் நன்றி கூறினார்.