உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் ஆபத்தான மலைப் பயணம்

வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் ஆபத்தான மலைப் பயணம்

வத்தலக்குண்டு : பழைய வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயிலுக்குச் செல்லும் மலைப்பாதையில் தடுப்புச் சுவர் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

பழைய வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயிலுக்கு பல ஆண்டுகளாக நடைப்பயண மாகத் தான் பக்தர்கள் சென்று வந்தனர். இதனால் வயதானவர்கள் படிகளில் ஏற சிரமப் பட்டனர். பலர் கோயிலுக்குச் செல்வதை தவிர்த்தனர்.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன் தாய் திட்டத்தின் கீழ் ரூ. 6 லட்சத்தில் மலைக்கோயி லுக்குச் செல்ல இரு, நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் தார் ரோடு அமைக்கப் பட்டது.

ரோடு ஓரத்திலும், திருப்பங்களிலும் தடுப்புச் சுவர் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. வாகனங்கள் விலகுவதற்காக ரோட்டிலிருந்து இறங்கினால் 100 அடி பள்ளத்தில் உருண்டுவிடும். இப்பயணத்தில் அந்தளவு ஆபத்து உள்ளது. மேலும் பார்க்கிங் வசதி இல்லாமல் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்த வேண்டியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையினர் கோயில் பாதையில் தடுப்புச் சுவர் கட்டவும், பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !