உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்னூர் மாசாணியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

குன்னூர் மாசாணியம்மன் கோவில் திருவிழா துவக்கம்

குன்னூர் : குன்னூர் மாடல் ஹவுஸ் மாசாணியம்மன் கோவில், 18வது ஆண்டு விழா துவங்கியது. குன்னூர் மாடல்ஹவுஸ் பகுதியில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், 18வது ஆண்டு திருவிழா அதிகாலை, 5:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து கன்னிமாரியம்மன் கோவிலில் இருந்து சக்தி கும்பஸ்தானம் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. இன்று (மே., 22ல்) காந்திபுரத்தில் இருந்து புறப்படும் கொடி மர ஊர்வலத்தை தொடர்ந்து, கொடியேற்றம் நடக்கிறது. 24ம் தேதி தீர்த்தக்குட ஊர்வலம், அம்மன் திருக்கல்யாண உற்சவம், அம்மன் திருவீதி உலா, கொடியிறக்கம், மஞ்சள் நீராடல் விழா, மகா முனி பூஜை, சுடலை மாடன் பூஜை ஆகியவை நடக்கின்றன. 25ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !