சென்னிமலை விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :2591 days ago
சென்னிமலை: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று (மே., 21ல்) சென்னிமலை பகுதியில் உள்ள விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது.
சென்னிமலை அடிவாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவில், கிழக்கு ராஜா வீதி ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், காங்கேயம் ரோடு மாரியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில், அரச்சலூர் ரோட்டில் உள்ள விநாயகர் கோவில், காந்தி நகர் சக்தி விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.