உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு

அன்னூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு

அன்னூர் : பொகலூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு திருவிழா நேற்று (மே., 22ல்) நடந்தது. மாரியம்மன் கோவிலில், கடந்த, 14ம் தேதி அக்னி கம்பம் நடப்பட்டு, பூச்சாட்டு திருவிழா துவங்கியது.

அன்றாடம் மாலை கம்பம் சுற்றி ஆடுதலும், சிறப்பு வழிபாடும் நடந்தது. 20ம் தேதி விநாயகர், பத்ரகாளி, மந்தை முனியப்பனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது.

21ம் தேதி இரவு அம்மன் அழைத்து வருதல் நடந்தது.நேற்று (மே., 22ல்) காலையில், கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கப்பட்டது. பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களிலுள்ள பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !