மடத்துக்குளம் உச்சி மாகாளியம்மன் கோவில் திருவிழா
ADDED :2334 days ago
மடத்துக்குளம் : மடத்துக்குளம், அரியநாச்சிபாளையத்தில் உச்சிமாகாளியம்மன் கோவிலில், திருவிழா, கடந்த 13ம் தேதி விநாயகர் பொங்கலுடன் துவங்கியது. தொடர்ந்து, 15ம் தேதி,
இரவு உச்சிமாகாளியம்மன் திருவிழா சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்றுமுன்தினம் (மே., 21ல்), அமராவதி ஆற்றிலிருந்து, தீர்த்தம் எடுத்து வந்து, இரவு, 8:00 மணிக்கு அம்பாளுக்கு அபி
ஷேகத்துடன் சிறப்பு அலங்காரம் நடந்தது. அன்று இரவு, 10:00 மணிக்கு, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
திருவிழாவையொட்டி, நகைச்சுவை பட்டிமன்றம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடந்தன. நேற்று (மே., 22ல்), பக்தர்கள், பூவோடு எடுத்தும், மாவிளக்கு படைத்து மற்றும் பொங்கல் வைத்தும் வழிபட்டனர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (மே., 23ல்) திருவிழாவின் நிறைவாக, பொது அபிஷேகம் நடக்கிறது.