தர்மபுரி அருகே மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் பால்குட ஊர்வலம்
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, வெண்ணாம்பட்டி ஸ்ரீ ஓம்சக்தி கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று (மே., 23ல்) பால்குட ஊர்வலம் நடந்தது. தர்மபுரி அடுத்த வெண்ணாம்பட்டியில், ஸ்ரீ ஓம்சக்தி கோட்டை மரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின், 35ம் ஆண்டு விழா, கடந்த, 14ல், துவங்கியது. அன்று காலை, 10:00 மணிக்கு, கொடியேற்றம் மற்றும் கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. பகல், 1:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த, 20ல், மாலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், இரவு, 8:00 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடந்தது. நேற்று முன்தினம் (மே., 22ல்), மாலை, 5:00 மணிக்கு, அம்மனுக்கு கூழ் ஊற்றப்பட்டது. நேற்று (மே., 23ல்) காலை, 8:00 மணிக்கு, சக்தி கரகம் மற்றும் பால்குட ஊர்வலமும், மாலை, 5:00 மணிக்கு, மாவிளக்கு ஊர்வலமும் நடந்தது. இன்று (மே., 24ல்)காலை, 8:00 மணிக்கு, அம்மன் திருவீதி உலா நடக்க உள்ளது. இரவு, 7:00 மணிக்கு, அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.