கிருஷ்ணராயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா: பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED :2333 days ago
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், மேட்டு மகாதானபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா வை முன்னிட்டு, பக்தர்களின் தீர்த்த குட ஊர்வலம் நடந்தது. கிருஷ்ணராயபுர மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பிச்சம்பட்டியை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், நேற்று (மே., 24ல்) காலை காவிரி ஆற்றில் இருந்து, தீர்த்த குடம் எடுத்துக்கொண்டு, கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதை தொடர்ந்து திருவிழா துவங்கியது.
இதேபோல், கிருஷ்ணராயபுரம் அடுத்த மேட்டு மகாதானபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, மகாதானபுரம் காவிரி ஆற்றில் இருந்து, 100க்கும் மேற்பட்டோர், தீர்த்த குடம் எடுத்து கோவிலுக்கு சென்றனர்.