குளித்தலை மல்லாண்டவர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :2333 days ago
குளித்தலை: தண்ணீர்பள்ளி மல்லாண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று (மே., 24ல்) நடந்தது. குளித்தலை அடுத்த, கீழதண்ணீர்பள்ளியில் மல்லாண்டவர் கோவில் உள்ளது.
இக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (மே., 23ல்) காலை, குளித்தலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடம், தீர்த்த குடம் எடுத்து வந்தனர். பின், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை, யாகசாலையில் விக்னேஷ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று (மே., 24ல்) காலை யாகசாலையில் இரண்டாம் கால பூஜை நடந்தது. அதன்பின், கோவில் கோபுர கலசத்திற்கு தீர்த்தம் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.