லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்
ADDED :2516 days ago
திண்டிவனம்:திண்டிவனம் லட்சுமி நரசிம்மர் கோவில் பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது.பிரமோற்சவ விழா கடந்த 16ம் தேதி செல்வர் புறப்பாடுடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது.பத்தாம் நாள் உற்சவமான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட சுவாமி தேரில் எழுந்தருளச் செய்து, தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர்.இன்று 26ம் தேதி நாச்சியார் சம்பவ ரதம், மாலையில் சந்திர பிரபை நடக்கிறது. 27ம் தேதி மாலை விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.