உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை

வால்பாறை கோவிலில் ஆஞ்சநேயருக்கு பூஜை

வால்பாறை: வால்பாறை கோவிலில், ஆஞ்சநேயருக்கு நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவில் சன்னதியில் ஆஞ்சநேயர் சுவாமி சிலை சமீபத்தில், பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதனையடுத்து, சுவாமிக்கு நேற்று முன்தினம் மாலை, சிறப்பு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பக்தி பாடல்களை பாடினர். சிறப்பு பூஜையில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !