உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு

தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் வசந்தோற்சவம் நிறைவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கோடை வெப்பத்தின் உச்சத்தை போக்கிடும் வகையிலான வசந்தோற்சவ வைபவம் கடந்த 23ம் தேதி துவங்கியது.

தினமும் மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை குளுமை தரும் வாசனை திரவியங்களால் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் நடந்தது.வெட்டி வேரினாலான பந்தல் அமைத்து பெருமாள், தாயாருக்கு வசந்தோற்சவ பூஜை நடத்தப்பட்டது. 3ம் நாளான நேற்று முன்தினம் வரை நடந்த வைபவத்தினை கோவில் அர்ச்சகர் தேசிக பட்டர் செய்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !