முருங்கப்பாக்கத்தில் தெப்பல் திருவிழா
ADDED :2326 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ திருவிழாவில் தெப்பல் உற்சவம் நடந்தது.முருங்கப்பாக்கம், திரவுபதி அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 6ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் அபிஷேக ஆராதனையும், இரவு அம்மன் வீதியுலாவும் நடந்து வந்தது. கடந்த 23ம் தேதி காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், இரவு அர்ச்சுணன் தவம், சுவாமிகள் வீதியுலா நடந்தது.கடந்த 24ம் தேதி காலை 10:00 மணிக்கு அபிஷேக ஆராதனையும், பகல் 12.00 மணிக்கு படுகள நிகழ்ச்சியும், மாலை 6.00 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. மறுநாள் 25ம் தேதி காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 9:00 மணிக்கு தெப்பல் உற்சவம் நடந்தது.