வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2372 days ago
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.பண்ருட்டி பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், கடந்த 24ம் தேதி, திருவோணம் நட்சத்திரத்தை முன்னிட்டு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.காலை 10:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கும், தாயாருக்கும் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருமண கோலத்தில், ஸ்ரீதேவி,பூமிதேவி சகிதமாக பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு 8:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.