உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊத்துப்பாளையம், செல்வ விநாயகர் கோவில் ஆண்டு விழா

ஊத்துப்பாளையம், செல்வ விநாயகர் கோவில் ஆண்டு விழா

அன்னூர்:ஊத்துப்பாளையம், செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா நேற்று (மே., 26ல்) நடந்தது.

ஊத்துப்பாளையம், செல்வ விநாயகர், பனந்தூர் மாரியம்மன், பத்ரகாளியம்மன், கருப்பராயர் கோவில்களின் கும்பாபிஷகே முதலாம் ஆண்டு விழா நேற்று (மே., 26ல்) நடந்தது. காலையில் துவங்கி மதியம் வரை, கருப்பராய சுவாமிக்கு, 108 சங்காபிஷேகம் வேதிகார்ச்சனை, அலங்கார பூஜை, அபிஷேக பூஜை நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.கோவில் வளாகத்தில், புதிதாக கட்டப்பட்ட மண்டப திறப்பு விழா நடந்தது. சுற்றுவட்டார மக்கள் திரளாக பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !