திருப்பரங்குன்றத்தில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை
ADDED :2427 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் தனி
சன்னதியில் எழுந்தருளியுள்ள ஸ்வர்ண ஆகர்ஷண பைரவருக்கு சிறப்பு அபிஷகேம், பூஜை முடிந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் வடுக
பைரவர், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கால பைரவர், கல்கத்தா காளியம்மன் கோயிலில் கால பைரவருக்கு பல்வகை திரவிய அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.