சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :2318 days ago
கோவை: சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த, திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோவிலில் கடந்த, 16ம் தேதி பிரம்மோற்சவம் விழா துவங்கியது. தினமும் பெருமாள், ஒவ்வொரு வாகனத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சதுஸ்தானார்ச்சனம், சன்னிதி புறப்பாடு, திருமஞ்சனம் என பல்வேறு நிகழ்ச்சிகளை அடுத்து, நேற்று காலை திருக்கல்யாண மஹோத்சவம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மாலை, 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் நடந்த திருவீதி உலாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.