உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா

 மேலுார்: மேலுார் சாத்தமங்கலத்தில் ஹரிஹர புத்திர அய்யனார் கோயில் வைகாசி புரவி எடுப்பு திருவிழா நேற்று நடந்தது.இரண்டு நாட்கள் நடக்கும் இத்திருவிழாவில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பக்தர்கள் இ.மலம்பட்டி குதிரை பொட்டலில் இருந்து புரவிகளை 10 கி.மீ., துாரத்திலுள்ள சாத்தமங்கலம் மந்தைக்கு கொண்டுவந்தனர். இன்று(மே 28) மந்தையில் இருந்து புரவிகள் அய்யனார் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு பொங்கல் உற்ஸவம் நடக்கும். இதில் சாத்தமங்கலம், மீனாட்சிபுரத்தை சேர்ந்த 5 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !