திரவுபதியம்மன் கோயிலில் பகாசூரனுக்கு விருந்து
ஆர்.கே.பேட்டை : திரவுபதியம்மன் கோவில், அக்னி வசந்த உற்சவத்தில், நாளை மறுதினம், பகாசூரனுக்கு, பீமசேனன் கும்பம் எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆர்.கே.பேட்டை அடுத்த, செல்லாத்துார் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. தினசரி, மகாபாரத சொற்பொழிவு நடத்தப்பட்டு வருகிறது.காலை, மாலை என, தினசரி திரவுபதியம்மன் தீர்த்தவாரிக்கு, குளக்கரைக்கு எழுந்தருளி வருகிறார்.தீர்த்தவாரிக்கு சென்று திரும்பும் அம்மனுக்கு, வீடுதோறும் பெண்கள் ஆரத்தி எடுத்து, வணங்குகின்றனர்.இதில், முக்கிய நிகழ்வான பகாசூரன் கும்பம் மற்றும் தெருக்கூத்து துவக்கம் உள்ளிட்டவை, நாளை மறுதினம் இடம் பெறஉள்ளன.நாளை மறுதினம் மாலை, பகாசூரன் கும்பம் படைக்கும் நிகழ்ச்சியில், மாட்டு வண்டியில் பீமசேனன் கும்பம் சேகரிக்க, வீதிவலம் வர உள்ளார். அன்று இரவு, 10;00 மணிக்கு, தெருக்கூத்து நிகழ்ச்சி முதல், நாள் ஆட்டம் துவங்குகிறது. அதை தொடர்ந்து, ஜூன் 9ம் தேதி காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், அன்று மாலை, தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளன.