உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உண்டியலில் ரூ.56.46 லட்சம் வசூல்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் உண்டியலில் ரூ.56.46 லட்சம் வசூல்

காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை, நேற்று எண்ணப்பட்டதில், 56.46 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு, பல மாநிலங்களில் இருந்து, பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் செலுத்தும் காணிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுகிறது. அதன்படி, நேற்று காலை, 10:30 மணிக்கு, அறநிலையத் துறை உதவி ஆணையர், ரமணி, செயல் அலுவலர், தியாகராஜன் முன்னிலையில் உண்டியல் திறந்து, காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 56.46 லட்சம் ரூபாய், 409 கிராம் தங்கம், 620 கிராம் வெள்ளி கிடைத்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !