ஊத்துக்கோட்டை வீர ஆஞ்சநேயர் பிரம்மோற்சவ விழா
ADDED :2324 days ago
ஊத்துக்கோட்டை : வெலமகண்டிகை வீர ஆஞ்சநேயர் கோவிலில், நாளை (மே., 29ல்), பிரம்மோற்சவ விழா துவங்க உள்ளது.பூண்டி ஒன்றியம், பென்னலூர்பேட்டை அருகே உள்ளது, வெலமகண்டிகை கிராமம்.இங்குள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில், வைகாசி மாதம்,10நாட்கள் பிரம்மோற்சவ விழா, 29ம் தேதி, துவங்குகிறது.ஒவ்வொரு நாளும், காலை, 7:00 மணி முதல், 10:00 மணி வரை, மூலவருக்கு அபிஷேக, ஆராதனை, 10:00 மணி முதல், 11:00 மணி வரை, சகஸ்ரநாம பாராயணம் நடைபெறும்.
மதியம், 2:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, ஹரிகதாகானம் நடைபெறும். இவ்விழாவில், வரும், 4ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடைபெறும்.இதைத் தொடர்ந்து உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.