திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலசாபிஷேகம்
ADDED :2324 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாளை (மே., 29ல்), 1,008 கலசாபிஷேகம் நடக்கிறது. கடந்த, 4ல், அக்னி நட்சத்திரம் தொடங்கியதை முன்னிட்டு, தினமும் அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமிக்கு தாராபிஷேகம் நடந்து வருகிறது. 29ல், நிறைவடை கிறது. நாளை (மே., 29ல்), 1,008 கலசங்கள் வைத்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, சுவாமிக்கு கலசாபிஷேகம் நடக்கிறது. அன்றிரவு சுவாமி, அம்பாள் வீதி உலா நடக்கிறது.