சிறுவாலையில் பாலேஸ்வரர் கோவிலில் உச்சிகால பூஜை
ADDED :2324 days ago
கண்டாச்சிபுரம்:சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார உச்சிகால பூஜை நடந்தது.
கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வரும் சோமவார பூஜை நேற்று 27ல், நடந்தது. அதனையொட்டி காலை 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாமம் பூஜையும், தொடர்ந்து உச்சிகால பூஜையில், பக்தர்கள் பங்கேற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்த பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.