உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சி சவுடேஸ்வரி கோவிலில் மகாகும்பாபிஷேகம்

செஞ்சி சவுடேஸ்வரி கோவிலில் மகாகும்பாபிஷேகம்

செஞ்சி:அனந்தபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை (மே., 29ல்) அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.

செஞ்சி தாலுகா அனந்தபுரம் சின்ன தெருவில் உள்ள செல்வ விநாயகர் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நாளை 29ம் தேதி நடைபெற உள்ளது. விழாவையொட்டி, இன்று 28ம் தேதி காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, எஜமானர் பூஜை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக சாந்தி நடக்கிறது.மாலை 4:00 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாகசாலை பூஜை நடைபெற உள்ளது. நாளை 29ம் தேதி காலை 6:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, நாடி சந்தானம், தத்துவார்ச்சனையும், 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், கடம் புறப்பாடும், 11:00 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 2:00 மணிக்கு மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !