உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வாழப்பாடி 100வது மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

வாழப்பாடி 100வது மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை

வாழப்பாடி: வாழப்பாடி, அக்ரஹாரம் காசிவிஸ்வநாதர் கோவில் வளாகத்திலுள்ள காலபைர வருக்கு, 100வது மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. காலபைரவர் சன்னதியில், மூலவருக்கு நேற்று (மே., 27ல்) காலை பால், தயிர், இளநீர், திருமஞ்சனம், தேன், பழவகைகளால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !