உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமகிரிப்பேட்டை அருகே, மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு

நாமகிரிப்பேட்டை அருகே, மழை பெய்ய வேண்டி வினோத வழிபாடு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அருகே, மழை வேண்டி வினோத வழிபாடு நடந்தது. தமிழகம் முழுவதும், கோடை மழை போதுமான அளவு பெய்யவில்லை. இதே நிலை தொடர்ந் தால் மழை காலங்களில் பருவமழையும் குறைவாகத்தான் இருக்கும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனால், மழை வேண்டி பல கிராமங்களில் பல்வேறு வழிபாடுகளை செய்கின்றனர். நாமகிரிப்பேட்டை அடுத்த, ஆர். புதுப்பட்டியில் மழை வேண்டி வினோத வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் ஒவ்வொரு வீடாக சென்று சோளம், நெல், கம்பு, அரிசி உள்ளிட்ட தானியங்களை பெற்று வருகின்றனர். மூன்று நாட்கள் விரதம் இருந்து, அவற்றை கூழாக்கி துலுக்க சூடாமணி அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு பூஜை செய்வர். இவ்வாறு செய்தால் அம்மனுக்கு வழங்கிய தானியம் போல் பல மடங்கு விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதுப்பட்டி மக்களும், தானியங்களை சேகரித்து, கூழ் ஊற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !