உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டை கண்டதேவி கோயிலில் வைகாசி கொடியேற்றம்

தேவகோட்டை கண்டதேவி கோயிலில் வைகாசி கொடியேற்றம்

தேவகோட்டை: தேவகோட்டை அருகேயுள்ள கண்டதேவியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான குங்குமகாளியம்மன் கோவில் உள்ளது.இக் கோவிலில் வைகாசி திருவிழா நேற்று முன்தினம் (மே., 26ல்) துவங்கியது.

முன்னதாக சொர்ணமூர்த்தீஸ்வரர் கோவிலில்அம்மனின் உற்ஸவ மூர்த்தி சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோவிலில் வைக்கப்பட்டு குங்கும காளியம்மனுக்குசிறப்பு பூஜைகளை செய்து குங்குமகாளியம்மனுக்கு காப்பு கட்டப்பட்டது.இரவு 8:40 மணிக்கு மேளதாளத்துடன் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து கொடிமரத்திற்கு அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அம்மனுக்கும் பூஜைகள் நடந்தன. தேவஸ்தானம் சார்பில் கண்காணிப்பாளர் செந்தில்குமார், கிராம பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்று அம்மனைதரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !