உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் சித்தர்கள் படங்களுடன் பைக் ஊர்வலம்

புதுச்சேரியில் சித்தர்கள் படங்களுடன் பைக் ஊர்வலம்

புதுச்சேரி: புதுச்சேரியில் வாழ்ந்த 19 சித்தர்களின் திருஉருவ படங்களை ஏந்தியபடி, மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடைபெற்றது.புதுவை தமிழ் சங்கம் சார்பில் 108 பேர் பங்கேற்ற ஊர்வலம் தமிழ் சங்கத்தில் இருந்து புறப்பட்டு, மணக்குள விநாயகர் கோவில், கருவடிக்குப்பம், எல்லைபிள்ளைசாவடி, ஒதியம்பட்டு, வில்லியனூர், அரியூர் வழியாக சின்னபாபு சமுத்திரத்தில் முடிவடைந்தது.

ஊர்வலத்தில் ஆதீனம் மார்க்கண்டேயர் திருமடம் சந்திரசேகர சுவாமிகள் தலைமையில் சீருடையில் கலந்து கொண்டனர்.

சங்கொலி முழங்க, அகண்ட தீபங்கள் ஏற்றி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.இதில், சென்னை, திருச்சி, கும்பகோணம், திண்டுக்கல், மயிலாடுதுறை, திண்டிவனம், காஞ்சிபுரம் உள்பட தமிழக பகுதிகளை சேர்ந்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில் புதுச்சேரியை சேர்ந்த கலியபெருமாள், இந்து மக்கள் கழக செயலர் மனோகர், சிவபாலா, அமுதமாறன், அமைப்பாளர் பொன்முடி, ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !