பத்ரகாளியம்மன் கோவிலில் புஷ்ப பல்லக்கு வீதியுலா
ADDED :2327 days ago
காரைக்கால்: அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவில் மகிஷ சம்கார நினைவுப்பெருவிழாவை முன்னிட்டு புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. திருநள்ளார் அடுத்த அம்பகரத்துாரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவி லில் மகிஷ சம்கார நினைவுப் பெருவிழா கடந்த 8ம் தேதி அம்மனுக்கு பூர்வாங்க அபிஷேக ஆராதனைகள் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவை முன்னிட்டு தினத்தோறும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கு வீதியுலா நடந்தது. அதைத்தொடர்ந்து. இரவு மகிஷ சம்கார நினைவு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் அறங்காவலர் குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.