ராமலிங்க சவுடேஸ்வரி கோயில் திருவிழா
எழுமலை : எழுமலை அருகே இ.கோட்டைப்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் வைகாசி திருவிழா கரகம் எடுக்கும் நிகழ்ச்சியுடன் நேற்று துவங்கியது.
உத்தப்புரம் முருகன் கோயில் முன்பிருந்து கரகத்தில் அம்மனை இறக்கி ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்தனர். வழியில் துஷ்ட சக்திகள் அணுகாமல் இருக்க பக்தர்கள் தங்கள் உடலில் கத்தி போட்டு வழிபாட்டு கோஷங்களுடன் உடன் வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அவனியாபுரம்அவனியாபுரம் மீனாட்சிநகர் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் பக்தர்கள் கத்தி போடும் திருவிழா நடந்தது.இக்கோயிலில் மகா உற்ஸவம் மே 26துவங்கியது. கோயில் பூஜாரிகள் சுவாமி பெட்டியை வைகை ஆற்றுக்கு எடுத்துச் சென்று அங்கிருந்து கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் சக்தி கரகம் எடுத்து ஊர்வலமாக திரும்பினர். இதில் பங்கேற்ற நுாற்றுக்கும் மேற்பட்டோர் உடலில் கத்திபோட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர்.