நல்லாபாளையத்தில் சுவாமி, அம்மன் வீதியுலா
ADDED :2328 days ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் இரண்டாம் நாள் உற்சவத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தீமிதி திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு இரண்டாம் நாள் உற்சவம் நடந்தது. மாலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு முத்துப்பல்லக்கு ஊர்வலமும், தெருக்கூத்து நாடகமும் நடந்தது.நேற்று இரவு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக பகாசூரனுக்கு பீமன் உணவு கொண்டு போகும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.வரும் 31ம் தேதி மாலை பெண்கள் பங்குபெறும் பொங்கலிடும் நிகழ்ச்சியும், மாடு விரட்டு, துரியோதனர் கோட்டை கலைத்தல் நிகழ்ச்சியும்; தொடர்ந்து, தீமிதி விழாவும் நடைபெறும்.