உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யதோக்தகாரி பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்!

யதோக்தகாரி பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவக்கம்!

காஞ்சிபுரம் :காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவம், நாளை காலை, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. காலை 4.30 மணியிலிருந்து, 5 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறும். காலை 6 மணிக்கு சப்பர உற்சவம், மாலை 6 மணிக்கு சிம்ஹ வாகனம் உற்சவம் நடைபெறும். இரண்டாம் நாள் உற்சவமான 17ம் தேதி காலை ஹம்ஸ வாகனம், மாலை சூர்ய பிரபை, 18ம் தேதி காலை பிரபல உற்சவமான கருடசேவை, மாலை ஹனுமந்த வாகனம், 19ம் தேதி காலை சேஷ வாகனம், மாலை சந்திர பிரபை, 20ம் தேதி காலை தங்க பல்லக்கு, மாலை யாளி வாகனம், 21ம் தேதி காலை சப்பரம், மாலை யானை வாகனம் நடைபெறும். ஏழாம் நாள் உற்சவமான 22ம் தேதி காலை 7.30 மணிக்கு, தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறும். மறுநாள் 22ம் தேதி பகல் 2 மணிக்கு, தொட்டித் திருமஞ்சனம், மாலை குதிரை வாகனம், 24ம் தேதி காலை ஆல்மேல் பல்லக்கு, தீர்த்தவாரி, மாலை வேதசார விமானம், 25ம் தேதி காலை த்வாதசாராதனம், மாலை வெட்டவேர் சப்பரம், த்வஜ அவரோஹணம் ஆகியவை நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !