உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோவில் 21ம் ஆண்டு திருவிழா

முத்துமாரியம்மன் கோவில் 21ம் ஆண்டு திருவிழா

பேரூர்: பேரூர் அடுத்துள்ள மத்வராயபுரம் முத்துமாரியம்மன் கோவிலில், 21ம் ஆண்டு திருவிழா, கடந்த 21ம் தேதி துவங்கியது. இதில், மாலை, 5:00 மணிக்கு தீர்த்த குடம் எடுத்து வந்து, அம்மனுக்கு பூச்சாட்டுதல் நடந்தது.

மறுநாள் இரவு, 7:30 மணிக்கு கம்பம் நடப்பட்டது. நேற்று இரவு, 9:00 மணிக்கு அம்மன் அழைப்பு மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையடுத்து நள்ளிரவு, 12:00 மணிக்கு சக்தி கரகம் நொய்யல் ஆற்றுக்கு எடுத்து செல்லப்பட்டது.இன்று காலை, 6:00 மணிக்கு நொய்யல் ஆற்றிலிருந்து சக்தி கரகம், கோவிலுக்கு எடுத்து வருதல் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு பக்தர்கள் அலகு குத்தி, 101 பூவோடு மற்றும் பால்கரகம் எடுத்து வருதல் நடக்கிறது.நாளை காலை, 11:00 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. மாலையில் மஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மனுக்கு, மஹா தீபாராதனையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !