உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 108 அடி உயர மஹாவிஷ்ணு சிலை பெங்களூரு வருகை

108 அடி உயர மஹாவிஷ்ணு சிலை பெங்களூரு வருகை

பெங்களூர்: பெங்களூரு, ஈஜிபுரா, கோதண்ட ராமசுவாமி கோவிலில் நிறுவுவதற்காக உருவாக்கப்பட்டுள்ள, பிரமாண்ட, விஷ்ணு சிலை, தமிழகத்திலிருந்து வழிநெடுக பல வித தடைகளை தாண்டி வந்து சேர்ந்துள்ளது.ஸ்ரீ மஹாவிஷ்ணு விராட்ட விஸ்வரூப விக்ரஹம் என்ற பெயரில் இது, இங்கு நிறுவப்பட உள்ளது. 24 அடி உயர பீடத்தில், 64 அடி உயர சிலை, 20 அடி உயர ஏழு தலை நாகம் என, 108 அடி உயரத்தில் இந்த சிலை, இன்னும் இரண்டாண்டு களில், பக்தர்களின் வழிபாட்டிற்கு வரும்.11 முக விஷ்ணு சிலைபெங்களூரு ஈஜிபுரா சதுக்கத்திலிருந்து, 200 மீட்டரில், கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. 1944ல் கட்டப்பட்ட இக்கோவிலின் அறங்காவலர், டாக்டர் எஸ்.சதானந்தா; இங்கு, மருத்துவமனை நடத்துகிறார்.

திருப்பதி - திருமலை தேவஸ்தான அறக்கட்டளை குழுவினர், கோதண்டராம சுவாமி கோவிலுக்கு ஒரு முறை வந்தனர். சுவாமி தரிசனம் செய்த அவர்கள், கோவில் முன், பிரம்மாண்ட, விஷ்ணு சிலை வைத்தால் நன்றாக இருக்கும் என, கூறியுள்ளனர்.இதையடுத்து, ஒரே கல்லில், 11 முகம் கொண்ட விஷ்ணு சிலையை அமைக்க முடிவானது.இதற்கான, கருங்கல் தேடும் பணி துவங்கியது.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூரில், கல் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பதி - திருமலை கோவில் நிர்வாகிகள், அக்கல்லை ஆய்வு செய்தனர். அந்த கல், சிறியதாக இருந்ததால், வேறு கல்லை தேடினர்.இறுதியில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், கொரக்கோட்டை என்ற கிராமத்தில் உள்ள குன்றில், விக்ரஹம் அமைக்க தகுதியான கல் கிடைத்தது.

இதற்கு, மத்திய புவியியல் மற்றும் சுரங்க துறையினரும் அனுமதி வழங்கினர். திருமலையி லிருந்து, 2014, அக்டோபரில் வந்த, ராஜேந்திர ஆச்சாரி என்பவர் தலைமையிலான, இருபது கலைஞர்கள், விஷ்ணு சிலையை செதுக்கும் பணியை, கொரக்கோட்டையில் துவக்கினர். இவர்களுக்கு, பெங்களூரிலிருந்து சென்ற, பத்து பேர் உதவினர். 2018 நவம்பரில் ஓரளவு பணிகள் முடிக்கப்பட்டன. 64 அடி உயரம், 25 அடி அகலம், 380 டன் எடையில் சிலை தயாரானது; நெற்றியில் பிரம்மாண்ட நாமமும் செதுக்கப்பட்டது.ஏழு மாத பயணம் கொரக் கோட்டையிலிருந்து, 2018 நவம்பர் 10ல், பெங்களூரு நோக்கி பயணத்தை, சிலையை சுமந்தவாகனம் துவக்கியது. 160 சக்கரங்கள் உடைய விசேஷ லாரி, வாடகைக்கு எடுக்கப்பட்டது.திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை பழுதடைந் திருப்பதால், நாளொன்றுக்கு, 1 - 2 கி.மீ., மட்டுமே பயணித்தது.ஏழு மாதங்களுக்கு பிறகு, பெங்களூருக்குள் நுழைந்தது. நேற்று (மே., 29ல்), ஈஜிபுரா வந்தடைந்தது. இன்னும் ஓரிரு நாளில், கோவிலை அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சிலையின் எடை, 380 டன்னாக இருந்ததால், எடையை தாங்க முடியாமல், அடிக்கடி சக்கரங்கள் மாற்றப்பட்டன. உடனுக்குடன் சக்கரங்கள் மாற்றப்பட்டன. நேற்று காலை வரை, 130 சக்கரங்கள் மாற்றப்பட்டுள்ளன.12 ஆயிரம் லிட்டர் டீசல்சிலையை சுமந்து வந்த லாரிக்கு, நேற்று (மே., 29ல்) காலை வரை, 12 ஆயிரம் லிட்டர் டீசல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

இதற்கு, 7.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.சிலையின் அகலம் அதிகமாக இருந்ததால், திருவண்ணாமலை, செங்கம் பகுதிகளில், பல கட்டடங்கள் இடிக்கப்பட்டன. இவ்வாறு, 50 கடைகள், 30 வீடுகள் இடிக்கப்பட்டதற்கு, கட்டட உரிமையாளர்களுக்கு, இழப்பீடும் வழங்கப்பட்டது. ஒரு லட்சம் ரூபாய் முதல், 1.30 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்பட்டது.சிலை பயணித்த பகுதிகளில், பக்தர்கள் கூட்டம், வெள்ளம் போல் வந்து வழிபட்டது.

கற்பூரம் ஏற்றி, பூஜை செய்து மக்கள் வழிபட்டனர். வாகனங்களில் செல்வோர், சிலை முன், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.கோதண்டராம சுவாமி கோவிலுக்கு சிலை வந்தவுடன், திருப்பதி - திருமலையிலிருந்து, மூத்த கலைஞர்கள் வருவர். அவர்கள், சிலையை முழுமையாக செதுக்குவர். இப்பணிக்கு, இரண்டு முதல், மூன்று ஆண்டுகள் வரை ஆகும்.இதன் பின், கோவில் முன் அமைக்கப்படும், 24 அடி உயர பீடத்தில், விஷ்ணு சிலை, பிரதிஷ்டை செய்யப்படும்.போலீஸ் உதவிஇந்த சிலை பெங்களூரு வந்து சேர, தமிழகம், கர்நாடகா மாநிலங்களின் போலீசார், முழு ஒத்துழைப்பு அளித்துஉள்ளனர்.

இரு மாநில எல்லையான, கர்நாடகாவின் அத்திப்பள்ளியில் நுழைந்ததும், பெங்களூரின், 130 போக்குவரத்து போலீசார், வாகனங்களை சீர்படுத்தி, அனுப்பி வைத்தனர். இடையூறாக இருந்த மின் கம்பங்களை அகற்றப்பட்டு, மீண்டும் நடுவதற்கு, பெஸ்காம் ஊழியர்கள் உதவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !