உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போரூரில் அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணம்

போரூரில் அர்ச்சுனன் திரவுபதி திருக்கல்யாணம்

போரூர் : போரூரில் உள்ள, தர்மராஜா கோவிலில், திரவுபதி அம்மன் திருக்கல்யாண வைபோகம், விமரிசையாக நடைபெற்றது.போரூர், சேக்மாணியம் பகுதியில் உள்ள, தர்மராஜா கோவிலில், நேற்று (மே., 29ல்) காலை, 9:00 மணிக்கு, அர்சுனன் - திரவுபதி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.இரவு, 9:00 மணிக்கு, திருமணக் கோலத்தில், அர்சுனன் -- திரவுபதி அம்மன் வீதி உலா நடைபெற்றது.

இக்கோவிலில், விழா நிறைவு பெறும் வரை, தினமும் மதியம், அன்னதானமும்; இரவு, 10:00 மணிக்கு, தெருக்கூத்து நாடகமும் நடைபெறும்.வரும், 31ம் தேதி காலை, 10:00 மணிக்கு, காரம்பாக்கம், ஆதிகுபேர ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்து, சக்தி கரகம் எடுத்து வரப்படும்.ஜூன், 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு, தீ மிதி திருவிழா நடைபெறும். அன்று இரவு, 9:00 மணிக்கு, 32 கைகளுடன் கூடிய சிறப்பு அலங்காரத்துடன், ஸ்ரீ மகிஷாசூரமர்த்தினியின் வீதி உலாவும் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !