உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி மாரியம்மன் திருவீதி உலா

கிருஷ்ணகிரி மாரியம்மன் திருவீதி உலா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள, பூதிமுட்லு கிராமத்தில் உள்ள, மாரியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 26ல் துவங்கியது.

தொடர்ந்து கோவிலில், தினமும் அம்மனுக்கு பால்குட ஊர்வலம், மஞ்சள் நீர், மாவிளக்கு ஆகியவற்றை பெண்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று பூஜைகள் செய்தனர். அம்மனுக்கு ஆராதனைகள், அபிஷேகங்கள் நடந்தன. இதில், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் (மே., 28ல்) வேப்பனஹள்ளி நகரில், அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !