அந்தியூர் அருகே மழை வேண்டி சிறப்பு யாகம்
ADDED :2340 days ago
அந்தியூர்: இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த உத்தர விடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, அந்தியூர் அருகே உள்ள பட்லூரில் இருந்து, வெள்ளித்திருப்பூர் செல்லும் சாலையில் மிகவும் பழமைவாய்ந்த வாகீஸ்வரர் கோவில் உள்ளது.
இங்கு நேற்று (மே., 29ல்) காலை, விநாயகர் பூஜையுடன் துவங்கி, வருணபகவானுக்கு வேதி கார்ச்சனை செய்யப்பட்டது. மேலும் நந்தி பொருமானும், ஐந்து குருக்களும் ஒரு பெரிய பாத்திரத்தில் தனித்தனியாக அமர்ந்து நீரை ஊற்றி, 1,008 வருணஜெபம் செய்தல், மழை வேண்டி பதிகம் பாடுதல் நிகழ்ச்சி நடந்தது. இறுதியாக வாகீஸ்வரர் மற்றும் சவுந்திர நாயகிக்கு வருண தீர்த்த அபிஷேகத்துடன் நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியில் அந்தியூர், பட்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.