உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் மழை வேண்டி வருண லிங்கத்தில் ஜெபம்

திருவண்ணாமலையில் மழை வேண்டி வருண லிங்கத்தில் ஜெபம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மழை வேண்டி வருண லிங்கத்தில், சிவாச்சாரியார்கள் ஜெபம் செய்தனர்.

திருண்ணாமலை மாவட்டத்தில், கடும் கோடை வெப்பத்தால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில்,
மழை வேண்டி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்களில் ஒன்றான, வருண லிங்கத்தில், கோவில் சிவாச்சாரியார்கள், நீர் நிரம்பிய பெரிய பாத்திரத்தில் அமர்ந்து, வருண ஜெபம் செய்தனர். மேலும், யாகசாலை அமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அதில் வைத்து பூஜித்த புனித நீரை கொண்டு, வருண லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேகம்
செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !