உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவலுார் மாரியம்மன் திருவீதி உலா

கருவலுார் மாரியம்மன் திருவீதி உலா

உடுமலை: உடுமலை, வடபூதிநத்தம் கருவலுார் மாரியம்மன் கோவில் திருவிழாவில், சுவாமி திருவீதி உலா நேற்று நடந்தது.

உடுமலை அருகே வடபூதிநத்தம் ஊராட்சியில், கருவலுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், வைகாசி மாத திருவிழா, கடந்த 28ம் தேதி துவங்கியது. அன்று காலை,
பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்தனர். இரவு, 8:00 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், அம்மனுக்கு சிறப்பு அபிேஷக, அலங்காரத்துடன் திருக்கல்யாண உற்சவ விழா துவங்கியது. காலை, 9:30 மணிக்கு மாங்கல்ய தாரணம், மாலை, 3:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலம் மற்றும் மாலை, 6:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழா  நிறைவாக, நேற்று மாலை அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !