மழை வேண்டி வைகையில் இசை ஆராதனை
ADDED :2355 days ago
மதுரை: வைகை பெருவிழாவை முன்னிட்டு மதுரையில் மழை வேண்டி நேற்று யானைக்கல் அருகே வைகையில் இசை ஆராதனை நடந்தது.
அரசு இசைக்கல்லுாரி முதல்வர் டேவிட் தலைமை வகித்தார். வைகை நதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் வரவேற்றார். மழை தரும் அம்ருதவர்ஷினி ராகத்தில் இசைக்கல்லுாரி மாணவியர் பாடல்கள் பாடினர். சிவானந்த தபோவனம் சுவாமி சிவானந்த சுந்தரரானந்தா சரஸ்வதி, சுவாமி சாஸ்வதானந்தா, சின்மயா மிஷன் சுவாமி சிவயோகானந்தா, துறவியர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதானந்தா பங்கேற்றனர். தாம்பிராஸ் நிர்வாகி இல.அமுதன், வழக்கறிஞர் திலகர், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இசை ஆசிரியை சாவித்திரி ஒருங்கிணைத்தார்.