போடி கோயில்களில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED :2356 days ago
போடி: பிரதோஷத்தை முன்னிட்டு போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லையசுவாமி கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். போடி அருகே பிச்சாங்கரை கயிலாய கீழச்சொக்கநாதர் கோயில், மேலச்சொக்கநாதர் கோயில், போடி பரமசிவன் கோயில், சுப்பிரமணியர் கோயில், வினோபாஜி காலனி மீனாட்சி சுந்தரரேஸ்வரர் கோயில், விசுவாசபுரம் பத்திரகாளியம்மன் கோயிலில் சிவனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.