செஞ்சி ராமலிங்க சவுடேஸ்வரி கோவிலில் விழா
ADDED :2360 days ago
செஞ்சி: அனந்தபுரம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் மார்பில் வாள் தாங்கி அம்மனை அழைத்து வரும் சடங்கு நடந்தது.செஞ்சி அடுத்த அனந்தபுரம் சின்ன தெருவில்
உள்ள செல்வ விநாயகர் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் (மே., 30ல்) நடந்தது.விழாவின்
தொடர்ச்சியாக நேற்று முன்தினம் (மே., 30ல்) காலை செட்டி குளத்தில் இருந்து நீர் எடுத்த வந்து செல்வ விநாயகர், ராமலிங்க சவுடேஸ்வரிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பகல் 11:00
மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு வீரகுமாரர்கள் மார்பில் வாள் தாங்கி அம்மனை அழைத்து வரும் சடங்கு நடந்தது.