விக்கிரவாண்டி அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேகம்
ADDED :2360 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அங்காள பரமேஸ்வரி கோவில் மகா கும்பாபி ஷேகம் நடந்தது.அதனையொட்டி, கடந்த 28ம் தேதி காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமத் துடன் யாக சாலை பூஜை துவங்கியது.கடந்த 29ம் தேதி காலை 10:00 மணிக்கு யாகசாலை பூஜை முடிந்து 10:20 மணிக்கு மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி தலைவர் செந்தில்குமார் கோவில் கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தார். யாகசாலை பூஜைகளை சென்னை சுவாமிநாத சர்மா தலைமையில் குழுவினர் செய்திருந்தனர்.