உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூரம் கூரத்தாழ்வான் கோவிலில், வைகாசி உற்சவம் நிறைவு

கூரம் கூரத்தாழ்வான் கோவிலில், வைகாசி உற்சவம் நிறைவு

கூரம் : கூரம் கூரத்தாழ்வான் கோவிலில், வைகாசி ரேவதி ப்ரதிஷ்டா மஹோத்ஸவம், நிறைவு பெற்றது.காஞ்சிபுரம் அடுத்த கூரம் கிராமத்தில், ஆதிகேசவபெருமாள் மற்றும் கூரத்தாழ்வான் கோவில் உள்ளது.

ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், வைகாசி ரேவதி ப்ரதிஷ்டா மஹோத்ஸவம், மூன்று நாட்கள் நடைபெறும்.அதன்படி இந்தாண்டு, முதல் நாள் உற்சவம், 28ல் துவங்கியது. உற்சவத்தையொட்டி, தினமும், காலையில் பல்லக்கில் கூரத்தாழ்வான் புறப்பாடும், பகல், 2:00 மணிக்கு திருமஞ்சனமும், மாலை, 4:00 மணிக்கு திருப்பாவை சாற்றுமறையும் நடந்தது.நிறைவு நாளான நேற்று முன்தினம் (மே., 30ல்) இரவு, தங்கமங்களகிரியில் எழுந்ருளிய கூரத்தாழ்வான், முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !