மாமல்லபுரம் பெருமாள் கோவில் திருக்குளம் தூர்வார கோரிக்கை
ADDED :2360 days ago
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் உள்ள குளத்தை தூர்வார வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில் அருகே, புண்டரீக புஷ்கரணி
திருக்குளம் உள்ளது.இரு ஏக்கர் பரப்பு குளம், பல ஆண்டுகளாக தூர் கிடக்கிறது. தூர் வாராததால், குளத்தில் ஊற்றும் சுரப்பதில்லை. நீர்வரத்து பாதைகள் அடைபட்டு உள்ளதால்,
குளத்திற்கு தண்ணீரும் வருவதில்லை.ஆண்டுதோறும், குளத்தில் பெய்யும் மழை, சில மாதங்களுக்கே தேங்குகிறது; கோடையில் முற்றிலும் வறள்கிறது.தற்போது, வறண்டு காணப்படும் குளத்தை தூர் வாரி பராமரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.