கோயில் பணியாளர்களுக்கு குடும்ப நலநிதி உயர்வு
ADDED :2360 days ago
சென்னை ; தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களின் குடும்ப நலநிதியை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையில், அறநிலையத்துறை கோயிலில் நிரந்தரமாக பணியாற்றும் பணியாளர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப நலநிதி தற்போது ஒரு லட்ச ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அது இனி, 3 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்கென கோயில் பணியாளர்களிடம் பெறப்படும் சந்தா தொகை ரூ.15 லிருந்து இனி 60 ரூபாயாக வசூலிக்கப்பட உள்ளது, என்று அதில் கூறப்பட்டுள்ளது.